October 30, 2012

பீட்சா : விமர்சனம்



இவங்கதான் இந்த படத்தோட ஈரோ & ஈரோயின்

சனிக்கிழமை பீட்சா படம் பார்த்தேன். வீட்டு உயரதிகாரி ஆசையா கேட்டதால  தட்டமுடியலை. கல்யாணம் ஆனதிலிருந்து நாங்க ரெண்டுபேரும் தியேட்டர்ல பாக்கிற 5 வது படம் இது.

1. இம்சை அரசன் 23-ம் புலிகேசி...
2.கஜினி
3.சகுனி
4.நண்பன்
5.பீட்சா

இதுல படம் ரிலீஸானவுடனே உடனடியா!!! பார்த்தது இந்த பீட்சா படம்தான்.

திகில் கம் சஸ்பன்ஸ் கம் பேய்!!! படம்.

மசலா மண்ணாங்கட்டினு சொதப்பாம படம் கடைசி வரை பார்க்க நல்லா இருந்தது. 

கதைனு ஏதும் இங்கே சொல்லிட்டா பாவம் உலகத் தொலைகாட்சியில் முதன்முறையாகனு எப்பவாது போடும்போது கூட பாக்குறதுக்கு  இண்ட்ரஸ்ட் இல்லாம போகும் அபாயம் இருக்கிறதால, படம் நல்லாருக்கு போய் பாருங்க....  அதோட விமர்சனம் ஓவர்.

படத்தில் ஹீரோ நடிப்பு சூப்பர். ரம்யா நம்பீசன் கொஞ்ச பூசுனாப்ல அழகா இருந்தாப்ல (டி.வில போட்ட குள்ளநரினு ஒரு படத்துல இத விட ஒல்லியா இருந்ததா ஞாபகம்), பருவோட பார்க்க அழகுதான். ரொம்ப மெனக்கெடுற பாத்திரம் இல்லை. 

பஞ்ச் டயலாக், ஹீரோவோட அலம்பல் ஆரம்ப சீன், குத்துப்பாட்டு, சோகப்பாட்டு, பிட்டுப் பாட்டுனு சாவடிக்காம , குறிப்பா பறந்து பறந்தொ, சொவத்துல ஒரு காலை வச்சி நெட்டி சுழட்றதோ, 50 பேர் ஏகே 47 துப்பாக்கில நேருக்கு நேர் சுட்டாலும் அந்தரத்துல பறந்து தப்பிச்சி வில்லன்ஸை தொவம்சம் பன்ற சீன் ஏதும் இல்லாம படம் எடுத்திருக்கும் இயக்குனருக்கு நன்றி.

 தியேட்டரை விட்டு வரும் போது கட்டைல போக, கடன்கார நாதாரி பணத்தையும், நேரத்தையும் வீணச்சுட்டானே பரதேசி.... இப்படி ஏதும் திட்ட வழியில்லாம நல்லா ஒரு படத்தை இயக்கிய டைரக்டருக்கு ஒரு சொட்டு.

படம் முடிஞ்சி படியில எறங்கி வரும்போது இரண்டு பெர் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது...


நபர் 1 : மச்சி படம் சூப்பர்ல ஆலிவுட் படம் ரேஞ்சுக்கு எடுத்துருக்காண்டா...

நபர் 2 : மண்ணாங்கட்டி, ஒரு பாட்டில்ல, பைட்டில்ல ஹீரோயினை வேஸ்ட் பண்ணிட்டாண்டா....
நபர் 1 : டேய் அதுக்கு நீ தாண்டவம், மாற்ற்றன் இப்படி போயிருக்கனும்டா இந்தப் படத்துக்கு ஏண்டா வந்தே....

நபர் 2 : எனக்கென்னடா தெரியும் பீட்சா-னு பெயர் பாத்துட்டு சரி மாடர்னா பீட்சா சாப்பிடுர ஜெனரேசன் பத்தின கதைபோல நல்ல யூத் ஃபீலிங்குல பொங்கிருப்பானுங்கனு நினைச்சி வந்தேன் ....

நபர் 2 : ஆமா கல்யாணம் ஆகாம சேர்ந்து வாழ்ற வெஸ்டர் கலாச்சாரத்துல முழ்கிப் போன ஹீரோ-ஹீரோயினுக்கு ஒரு மவுத் கிஸ் கூட வைக்காம பிற்போக்குத்தனமா இல்ல படம் எடுத்திருக்கான் இந்த இயக்குனர் பக்கி...

நபர் 1 : அது வந்து ஆடியன்ஸ் எதிர் பாக்கிற சீன் வராம அடுத்தடுத்து ட்விஸ்ட் வச்சாம்பாரு அதான் படத்தூட சக்சஸ் மச்சி... உனக்கெல்லம் ரசனை நல்ல படத்தை ரசிக்கத் தெரியலை...

(நடந்து தரைத்தளம் வந்துவிட்டாலும் அங்கே நின்று அவர்கள் பேசிக்கொள்ள, அவர்களின் பேச்சில் ஆர்வம் பொங்க கவனிக்காத மாதிரி பக்கத்துலேயே நின்று தொடர்ந்து ஒட்டு கேட்டதில்...)

நபர் 2 : ஆமாண்டா வெண்னைகளா ஒன்னு கதையே இல்லாம பாட்டு ஃபைட்டு, ரொமான்ஸுனு சாவடிங்க... இல்லைனா இந்த மாதிரி இருட்டுக்குள்ளேயே படம் எடுத்துட்டு ஹாலிவுட் படம்னு பீத்திக்கோங்க...

நபர் 1 : உனக்கெல்லாம் ரசனையே கிடையாதுடா... ஆரம்ப சீன்லேயெ ஒரு பேய் வீடு காட்டி ஆடியன்சை சீட்டு நுனிக்கி கொண்டு வந்துடான் கவனிச்சே இல்ல...

நபர் 2 : எது தியேட்டர்ல பிடிச்ச திருட்டு டிவிடி படம் ரேஞ்சுக்கு, கேவலமான விசூவலோட, என்ன எழவு பேசுறாங்கண்னே தெரியாம ஆடியோ சண்ட் இருந்துச்சே அந்த இண்ட்ரோ சீனாடா... போடாங்....

நபர் 1 : உன் கூட எல்லாம் இனிமே படம் பாக்க வரக்கூடாதுடா ரசனை கெட்ட ஜென்மம்....கர்ர்ர் தூ...
நபர் 2 :........

இப்ப எதுக்கு இங்கே வெட்டியா நின்னுட்டிருக்கீங்க.... போய் வண்டி எடுத்துட்டுவாங்க....போங்க.....(வீட்டு உயரதிகாரி....)

இந்த போய்ட்டே இருக்கேம்மா......  அவ்வ்வ்வ்வ்வ்


டிஸ்கி 1  : மக்களே நல்லாப் பாத்துக்கிடுங்க நானும் சினிமா விமர்சனம் எழுதிட்டேன்....எழுதிட்டேன்....எழுதிட்டேன்!!!!


டிஸ்கி 2 : படத்தோட ஹீரோ,ஹீரோயின் , டைரக்டர்னு பெயர்கள் தெரியனும்னாலோ, எடிட்டிங், போட்டோகிராஃபி, திரைக்கதைனு டெக்னிகல் சமாச்சாரம் பத்தி தெரிஜ்சுக்கனும்னாலோ..... உண்மைதமிழன், ஜாக்கி சேகர், கேபிள்சங்கர் மாதிரியானப்பட்டவங்க பிளாக் படிங்கோ....  இவங்கதான் ஏகப்பட்ட புரியாத சமாசாரங்களப் பத்தி பொய் பொய்யாப் பேசி எல்லாப் படத்தையும்  பாக்க வச்சிருவாங்கோ....:-))))


October 21, 2012

லவ் பேர்ட்ஸ் – பேட்(BAD) பேர்ட்ஸ்


லவ் பேர்ட்ஸ்....


           திருமணத்திற்கு முன் சனி, ஞாயிரோடு கூட ஒருநாள் விடுமுறை கிடைத்தாலும், ஊருக்கு பயணம்தான். ஊர் சென்றால் கிராமத்துச் சூழல், நண்பர்கள் எனற சந்தோசம் கிட்டும். கூடவே அண்ணனின்(பெரியப்பா பையன்) வீடு சென்று புதிதாக விருந்தினர் (எல்லாம் பெட் அனிமல்ஸ் தான்!!! ) யாரும் வந்திருக்கிறார்களா என்று பார்ப்பதுண்டு. அது கிளியோ  அல்லது கீரிப்புள்ளையோ  இரண்டே நாட்களில் கூடப் பழகி நண்பர் ஆக்கும் வித்தையை பெரியப்பாவிடம் இருந்து இவர் கற்றிருந்தார்.


            இந்த தடவை ஐந்து சோடி லவ் பேர்ட்ஸ் புதிதாக. அதுகள் செய்யும் சேஷ்டைகள் ரசிக்கும் படி இருந்தது. சலிப்பே இல்லாமல் அந்த சோடிகள் மூக்கை உரசிக் கொண்டும் ஊஞ்சல் கட்டை, மண்பானை என்று ஒன்றை ஒன்று துரத்தி விளையாடிக் கொண்டும் நாள் முழுவது அதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.

           விடுமுறை முடிந்து சென்னை செல்ல பேக் செய்து விட்டு , போகும் முன்  பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று மீண்டும் அண்ணன் வீடு சென்றேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஒரு சோடி லவ் பேர்ட்ஸ் பறவைகளை ஒரு பிரம்புக் கூடையில் வைத்து கூடவே 1 கிலோ தினையும் கட்டி வைத்திருந்தார்.

            எதற்கு என்று கேட்டபோது நீ ரெண்டுநாளா இதை சுத்தியே திரிஞ்சிட்டிருந்தே… போகும் போது எடுத்துட்டு போக ஆசப்பட்டாலும் படுவே. அதான் ரெடி பண்ணி வச்சிருக்கேனு சொன்னார். அவருக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு சென்னை பயணம் ஒரு சோடி லவ் பேர்ட்ஸ் பறவைகளுடன்.

சென்னை வந்தவுடன் மேலுல் இரண்டு நாட்கள் அலுவலகம் லீவ் போட்டு விட்டு வடபழனி, கோடம்பக்கம் என்று அலைந்து அது உறங்க, முட்டை இட்டு இனவிருத்தி செய்ய வேண்டி 2 மண்பானைகள், தினை,கம்பு என்று அதற்கான தீனிகள் வாங்கி வந்தேன். இனி அதற்கான வீடு (கூண்டு) வேண்டும் கடைகளில் ஆங்காங்கே சின்னதாகவே கிடைத்தது, அதில் எனக்கு விருப்பம் இல்லை. இங்கே கே.கே. நகரில் டிங்கெரிங் செட் வைத்திருக்கும் நண்பர் ஒருவரிடம் உதவிக்கு சென்றேன், அவர் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் கூட்டிச் சென்று தேவையான கம்பிகள் மற்றும் ஜல்லடை வாங்கி, அதில் அழகான, பெரிதான கூண்டு ஒன்று செய்து குடுத்தார்.

அலுவலகம் முடிந்து நேராக வீடு லவ் பேர்ட்ஸ் வேடிக்கை…… வந்து ஒரே மாதத்தில் 5 முட்டை இட்டு அடைகாத்தது.  ஊருக்கு அடிக்கடி போன் செய்து பறவைகலை நன்றாக பராமரிக்க அண்ணனிடம் ஆலோசனைகள் எல்லாம் நடந்தது. ஒரு அதிகாலையில் “மாமா குஞ்சு பொரிச்சிடுச்சி” என்று என் அக்கா பயன்களின் சத்தம் கேட்டு, ஓடிச் சென்று பார்த்தேன். மனது சந்தோசமாக இருந்தது. அன்று மாலைக்குள் 4 குஞ்சுகள்... ஒரு முட்டை கூமுட்டை போலும்.

     அதற்கென்று ஒரு மருத்துவரை தான் நியமிக்க வில்லை… மற்றபடி என்ன குடுக்க வேண்டும் என்ன செய்யவேண்டும் என்று போன் செய்து தொல்லை குடுத்ததில் ஊரில் இருக்கும் அண்ணன் கூட கொஞ்சம் சலிப்படைந்து விட்டார்.

    குஞ்சுகளுக்கு அது இரை ஊட்டும் அழகு இருக்கிறதே....கொஞ்சுகள் மீது அது காட்டும் அன்பு இருக்கிறதே… மனிதர்கள் கூட அதனிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம். வாவ் வாட் எ கேர்.

      நான் அறிந்த வரையில் குழந்தைகள் கவனிப்பில்/பராமரிப்பில்/குழந்தைதானே என்று ஒதுக்காமல் அவர்களின் உணர்வுகளுக்கு குடுக்கும் முக்கியதுவத்தில் அமெரிக்க பெற்றோர்களுக்கு முதலிடம்.

பேட் பேர்ட்ஸ்………

        குஞ்சுகள் வளர்ந்து தானாக இரை எடுக்க துவங்கியது. அதற்கு என்று கொத்துமல்லித் தண்டுகளை மிகச் சிறிய அளவில் நறுக்கிப் போட்டேன். இறக்கை முளைக்க ஆரம்பித்தது. தாய்ப்பறவையிடம் இருந்து விலகி தனித்து சக குஞ்சுகளுடன் விளையாட்டு.

      இப்போதுதான் நான் சற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் ஆரம்ப்பித்தது.

     கொஞ்சம் வளர்ந்தவுடன் குஞ்சுகளுக்கு ஆண்/ பெண் பாகுபாடுகள் புலப்பட்டது போலும் இதுவும் மூக்கு உரசும் ஆட்டத்தை தொடங்கியது. ஒரு படி மேலே சென்று வளர்ந்த ஆண் குஞ்சுகள் தாயின் மூக்கையும், பெண் குஞ்சுகள் ஆண் பறவையின் மூகையும் உரச எத்தனித்தது அது பாசத்தாலா அல்லது காமத்தாலா என்று எனக்கு புலப்படவில்லை. இந்த சமயத்தில்தான் தாய்ப்பறவைகளுக்கு குஞ்சுகள் விரோதிகள் ஆனதுபோலும்.

ஆண் பறவை பெண் குஞ்சுகளையும், பெண்பறவை ஆண் குஞ்சுகளையும் அதன் உச்சந்த்லையில் ஆக்ரோசமாக கொத்திக் கொன்று விட்டது.

        எனக்கு உண்மையில் கண் கலங்கி விட்டது…. அந்தப் பறவைகளை கொன்றுவிடலாமா என்றுக்கூட தோன்றியது. ஊருக்கு போன் செய்து விபரம் சொன்னேன். அவர் என்னைதான் திட்டினார், குஞ்சுகள் தானாக இறை உண்ணும் பருவம் வந்தவுடன் தனிக் கூண்டில் இட்டிருக்க வேண்டும் அது முழுமையான பறவை ஆனவுடன் வேண்டுமானால் சோடியாக மற்ற பறவைகளுடன் விடலாம். இல்லையென்றால் இப்படித்தான் போட்டி மனப்பான்மயில், எங்கே தன் சோடி மற்றதுடன் சென்று விடுமோ என்ற அச்சத்தில் இப்படி நடக்கும் என்றார்.

           எனக்கு சமாதானம் ஆகவில்லை, காரணம் எதுவாகிலும் பெற்றக் குஞ்சுகளை (சின்ன வயதில் பாம்பு தன் குட்டிகளை விழுங்குவதை தோட்டத்தில் ஒரு முறைப் பார்த்திருக்கிறேன்) கொன்றதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த லவ் பேர்ட்ஸ் மேல் இருந்த ஈர்ப்பு எனக்கு முற்றிலும் போய் விட்டது.

          இரண்டு நாள் கழித்து ப்ளூ கிராஸ் போன் செய்து அதை எடுத்துச் செல்லுமாறு கேட்டேன், சரியான பதில் இல்லை…. ஒரு வாரம் கழித்து வீட்டில் துணி துவைக்கும் வேலை செய்த அம்மா தன் மகன்கள் இதை விரும்புவதாக தெரிவித்தவுடன் எடுத்துச் செல்ல சொல்லிவிட்டேன். இரண்டு மாதம் தினை , கம்புக்கு காசு குடுத்தேன். பின் வேறு வீடு மாற்றலாகி வந்துவிட்டதால் அது பற்றிய செய்திகள் நின்று போனது.

        இப்போதெல்லாம் லவ்பேர்ட்ஸ் எங்காவது பார்த்தால் பழையப் பாசமோ பரவசமோ ஏற்படுவதில்லை. மனதில் லேசான கோவம் எட்டிப் பார்ப்பதாகவே எனக்குப் படுகிறது.

பசுமையை வெகுவாக ஒழித்ததன் மூலம் பூமியின் காலநிலையில் ( மான்சூன் ) மாறம் ஏற்பட்டிருப்பது போல்……


  

இயற்கையின் சமநிலைக் கோட்பாடுகளுக்குள் இது மாதிரியான சிசுக் கொலைகள் அடங்கிவிடுகிறதா???. இல்லை இது போன்ற செயல்களால் (கள்ளிப்பாலும்/நெல்லுமணியும் சேர்த்துதான்) சமநிலை கெடுகிறதா தெரியவில்லை.

டிஸ்கி : கடைசி மூன்று பத்திகள்... எழுதிய எனக்கே சரியாகப் புரியவில்லை…  படிக்கும் உங்களுக்கும் புரியவில்லையென்றால் இந்தப் பதிவை இலக்கிம் என்று வகைப் படுத்திவிடுவேன்


October 15, 2012

சென்னை போட்டோ-வாக் (Worldwide Photo walk - Chennai)




            ஸ்காட் கெல்பி(SCOT KELBY) சார்பாக உலகம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற போட்டோ வாக்(Photo walk) மீட்டிங் கடந்த 13-10-2012, சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது.


Worldwide Photo Walk
  சென்னை நிகழ்ச்சியை திரு நந்தகுமார் என்ற சென்னை நண்பர் ஒருங்கினைத்திருந்தார்.  உலகம் முழுக்க 1300 க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 32,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்வாகும். ஒரு குழுமத்திற்கு 50 நபர்கள்தான் கலந்து கொள்ள முடியும். அதை தாண்டினால் அடுத்த குழுவாகதான் செயல்படமுடியும். 

     சென்னை போட்டோவாக் எங்கு நடத்தலாம் என்று பதிவு செய்த உறுப்பினர்களிடம் ஆலோசனைகள் கேட்டு முடிவில் பெசண்ட்நகர் பீச்சில், அன்று நடைபெற்ற ஃப்ரிஸ்பீ டோர்னமெண்ட் மற்றும் கடற்கரை வட்டாரத்தில்,  புகைப்படங்கள் எடுப்பது பின் சற்று தூரத்தில் இருக்கும் உடைந்த பாலம்(broken bridge) சென்று அதன் சுற்றுபுரங்களில் படங்கள் எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

    பதிவு செய்த பலரும் எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் எனவே , கரைசேரா அலைகள் அரசனிடம் கேட்டு, அவருக்கும் இதில் ஆர்வம் இருப்பதால்அவரையும் இதற்கான வலைதலத்தில் பதியச் சொல்லி கூடவே அழைத்துச் சென்றேன்.

   இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. முதன் முதலில் அன்றைய தினத்தின் காலை நிகழ்வுகள் எல்லாவற்றையும், ரசனையுடன் படம் பிடித்தேன். கீழே நான் எடுத்த புகைப்படங்க சில உங்கள் பார்வைக்காக பகிர்ந்துள்ளேன்.


              போட்டோக்-கில் கலந்து கொண்ட அனைவரும் சேர்ந்து குழுவாக எடுத்த     போட்டோ. மூன்றுபேர் அவசரமாகெ சென்று விட்டதால் அவர்கள் இதில் இல்லை. 




சூர்யோதயம். கொஞ்ச தாமதித்து சென்றதாலும். மேகமுட்டம் இருந்ததாலும் சரியான சாட் கிடைக்கவில்லை. 


    ஸ்டண்ட் கிலாஸ் நடந்துகொண்டிருந்த இடத்திற்கு சென்று சம்மர்-சால்ட் பண்ணும் போது நான் எடுத்த போட்டோ. ம்ருபடி பண்னும்போது இன்னும் நல்ல ஸ்டில் எடுக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் கிளாஸ்முடிந்து விட்டது என சொல்லி போய் விட்டார்கள். நான் தான் தாமதமாக சென்றிருக்கிறேன்.


ஒரு அம்மனி நாயை  இல்லை சரியாகச் சொன்னால் அந்த அம்ம்னியைதான் இந்த நாய் இழுத்துகொண்டு சென்றது. கடல் அலையில் அடித்து வந்த தேங்காய் ஒன்றை ஓடிச் சென்று கவ்விக் கொண்டு வந்தது..... நான் அதை கவனித்து ஓடிச் சென்று படம் எடுப்பதற்கும் கரைஏ\றி வந்துவிட்டது. 


அங்க ஒரு இளவட்டம் பல்டி அடித்து விலயாடியபோது எடுத்த படம்.


 இந்த நாய் தகரத்திற்கு அறுகில் செல்லும்போதே எனது உள்ளுணர்வு அது சுச்சா தான் போகப்போகிரது என்று உணர்த்தியதால் வேக வேகமக இந்த சாட் எடுத்தேன். 10 செகண்ட் தாமதித்திருந்தால் சாதாரணமாக நடக்கும் ஸ்டில்தான் கிடைத்திருக்கும்.


இது அங்கே கிரிக்கெட் விளையடிக் கொண்டிருந்தவர்களை எடுத்தது. கிட்டத்தட்ட 5 சாட்களுக்குப் பிரகுதான் அந்த பேட்டில் பட்ட பாலுடன் ஸ்டில் கிடத்தது.


 பக்கத்தில் ப்ணக்கார குழந்தகள் ஸ்கேட்டிங் செண்ரு கொண்டிருந்தார்கள். அவர்களை மாஸ்டர் மற்றும் பெற்றோர்கள் ஏன்..ஒழுங்கப் போ, பேலன்ஸ் பண்ணிபோ என்று அரட்டிக் கொண்டு இருக்கையில் பத்தடி தூரத்தில் ஜாலியாக கட்டிப்புரளும் பசங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு வெட்டவெளியில் வாழ்க்கைநடத்தும் இவர்கள். படம் எடுத்ததை காட்டினேன் ரொம்ப சந்தோசம் அவர்களுக்கு. அதில் அந்த பையன்கள் எப்படி கேமராவில் படம் தெரிகிரது என்று துளைத்து விட்டார்கள். என்னால் சரியாக விளக்க முடியாமல். அது அப்படித்தான் என்ற ரீதியில் பதில் சொல்லி வந்தேன்.

 இது உடந்த பாலம் அருகே மறுகரையில் உள்ள கட்டிடம்.


இந்தகட்டிடமும் உடந்த பாலம் அருகே உள்ளது

மொத்தம் சுமார் 120 படங்கள். அதிகமான படங்கள் இங்கே போட்டால் வலை தளம் ஓபன் ஆவதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம் என்பதால் இங்கே சில பங்கள் மட்டும் பகிர்ந்துள்ளேன்.


October 13, 2012

அவர்கள் உண்மைகள் @ மதுரைத் தமிழனுக்கான பாராட்டுப் பதிவு . :-)))

முஸ்கி :  பதிவின் முடிவில் இருக்கும் டிஸ்கி படித்து விடவும் :-)))


 ஜோதிஜி திருப்பூர்  அவர்கள் கூகுல் ப்ளஸில் பகிர்ந்து கொண்டது இது


மந்திராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயில் உள்ளதுஇக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி செல்வது வழக்கம்மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பலமுறை நன்கொடை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவ செட்டிசுயமிந்தரா சாரி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நன்கொடை மூலம் சர்வஜ்ஜ மண்டபம் பின்புற முள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும்மேலும்100 அறைகளும் கட்டப்பட உள்ளதுஇதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.



இதற்கு Pattikaattaan Jey  என்பவர் இட்ட கருத்து

இவரு இந்த கோவிலுக்கே டொனேசன் குடுத்துக்கட்டும்சிவகாசி விபத்து மாதிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மம்மூட்டி கொடுத்துப்பார்வாழ்க ரஜினி சார்...ஓங்குக அவரது புகழ்.


இந்த கமெண்டோட சாரம்சத்தை நாராசமாக புரிந்து கொண்டு அதற்கு விளக்கம் கொடுத்து http://avargal-unmaigal.blogspot.in/2012/10/blog-post_12.html என்ற வலைப்பதிவு வைதிருக்கிற தமிழ்ப் பெருந்தகை, நவீன தமிழ்தென்றல், ஒலக அறிவாளி தனது பதிவில் கூறியது....


நாம் தமிழனாக பிறந்ததால் இந்த பட்டிக்காட்டனோடு சேர்ந்து கூட்டத்தோடு கூட்டமாக  வாழ்க ரஜினி சார்...ஓங்குக அவரது புகழ்.
என்று கூறி  அவரின் அடுத்த படத்திற்கான டிக்கெட்டுக்காக பொண்டாட்டிகளின் தாலியை விற்க ரெடியாகுவோம்


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


இனி என் பதிவு........

பேரை மதுரைத் தமிழன் அப்படினு வச்சிகிட்டு  சங்கம்  வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு மகாக் கேவலத்தைச் சேர்த்திருக்காரு.

ரஜினி நல்லவரா கெட்டவரா, அவர் தமிழனுக்கு நல்லது பண்ணாரா இல்லை அல்வா குடுத்தாரா....அதெல்லாம் தனியா விவாதிக்க வேண்டியவை.

அந்த விவாதம் தேவையா ... தேவையில்லையானு கூட ஒரு விவாதம் நடத்தலாம் அது அவரவர்கள் மனநிலையைப் பொறுத்தது...அது கருத்துச் சுதந்திரமும் கூட....

அந்த கமெண்ட்டில் நான் ரஜினி அவர்கள் சிவகாசி சமீபத்தில் நடந்தது போன்ற துயரங்களுக்கு உதவி செய்யாமல் மந்தாரலயாவுக்கு 10 கோடி குடுத்திருக்கிறாரே என்ற ஆதங்கத்தில....அவரை கிண்டலடிச்சி..... சிவகாசி சம்பவத்துக்கு மம்மூட்டி உதவியதை உயர்த்திச் சொன்ன கமெண்ட். 
அந்த கமெண்டுக்காக ரஜினிக்கி ஆதரவா வாதம் செய்தவர்களோடு நானும் எதிர் வாதம் செய்த பிளஸ் அது....

      இது சாதாரண தமிழ் அறிவு உள்ளவங்களுக்குப் புரியும்... அந்தளவுக்கு அறிவு கிடையாதுன்னாலும். அந்தப் பிளஸில் தொடர்ந்து நடந்த விவாதங்கள் பார்த்தாலும் புரிஞ்சிருக்கும்.

அந்த பிளஸ் சுட்டி கீழே

https://plus.google.com/u/0/108861639970432914204/posts/R4bwrMztHB4

ஆனா அந்த அடிப்படை அறிவு கூட இல்லாம  இவரும் சமுதாயத்துக்கு விழிப்பு உணர்வு ஊட்டுறதுக்கி கிளம்பிருக்கிரதப் பாத்தா....... #$%#$%$#லதான் சிரிப்பு வருது.....

சரி இப்ப ரஜினி அவர்களை வாழ்த்தினா மாதிரி இவருக்கும் ஒரு வாழ்த்துப்பா...

பிரபலப் பருப்பு பதிவரும், மதுரையிலிருந்து சமுதாயத்தை தனது விழிப்பு உணர்வுப் பதிவுகள் மூலமாக பல உணர்வுகள் ஊட்டி நாட்டை நட்டுக்க நிப்பாட்டக் கிளம்பி இருப்பவரும். உண்மையின் உறைகல்லாக தனது “அவர்கள் உண்மைகள்” என்ற வலைதளத்தை சீரும் சிறப்புமாக நடத்தி வருபவருமான திருவாளர் “மதுரைத் தமிழன்” அவர்கள் நூறாண்டுகள் வாழ்ந்து இதே மாதிரி பலரின் கமெண்ட்டுகள் படித்தி பல புரிதல்களுடன் தமிழ்ச் சேவை செய்ய, வெறுமனே வாழ்த்த வயதில்லாததால் ... வணங்கி வாழ்த்துகிறேன்.

உங்கள் தளத்திற்கு என்னாலான ஓசி விளம்பரம்... எஞ்சாய்......:-)))))

இப்படிக்கு

அவர்கள் உண்மைகள் @ மதுரைத் தமிழன்
அவர்களின்  பாசமிகு

பட்டிகாட்டான் Jey

டிஸ்கி :  அடுத்தவர் தவறுகள் பார்த்துப் பொங்கியெழும் மதுரைத் தமிழன் அவர்கள் கமெண்ட் மாடுரேசன் வைத்து கருத்துச் சுதந்திரத்தை கெட்டியாகக் கட்டிக்காப்பதால். நான் அங்கி இட்ட பின்னூட்டம் தெரியவில்லை. அது அவர் வெளியிடலாம் அல்லது பாராட்டி மட்டும் வரும் பொஇன்னூட்டங்கலை வெளியிடலாம். அது அவருக்கு மட்டுமே வெளிச்சம். என் கமெண்ட் அங்கு போட்டவுடன் வந்திருந்தால் இந்தப் பதுவி எழுதி என் வெட்டியான நேரத்தை வீனடிட்திருக்க மாட்டேன்.

      கமெண்ட் மாடரேசன் வைத்து கருத்துச் சுதந்திரத்தை வளர்க்கும் மதுரைத் தமிழன் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வழ்த்துகள். (அடுத்தவர்கள் கருத்தை விமர்சிப்பவர்கள் கமெண்ட் மாடுரேசன் வைத்துக் கொள்வது மகா மட்டமான செயல் என்பது என் கருத்து )

October 06, 2012



கண்ணீர் அஞ்சலி....




பதிவர் நண்பர் ”ஆயிரத்தில் ஒருவன்” திரு மணி அண்ணன் இன்று காலை காலமானார்.
அண்ணாரது இறுதிச் சடங்கு நளை 07-10-2012 ஞாயிறு காலை 9 மணிக்கு நடைபெறும் என்பதை வலைப்பதிவர்கள் நண்பர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று காலை பூந்தமல்லியில் பணி செய்யும் இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை சென்று அங்கு மருத்துவர்களால், வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததுவிட்டதாக அறிவித்திருக்கிரார்கள்.

ஏதேச்சையாக டிஸ்கவரி வேடியப்பன் அவருக்கு கால் பண்ணியதில் அவர் இறந்துவிட்டதாக வரின் மகன் சொல்ல. நண்பர் வேடியப்பன் என்னை அழைத்து, எதற்கும் நீங்கள் அவர் வீட்டுக்கு போன் செய்து உறிதிபடிதுங்கள் என்றார். நான் அழைத்தபோது அவரின் மூத்தமகன் எடுத்து மணி அண்ணன் இறந்த தகவலை உறுதிப்படுத்த, நான் என் மொபைலில் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்தேன்.

வீடு சென்றபோது வீடே துயரத்தில் இருந்தது. வாரம் ஒரு முறையாவது அலைபேசியில் தொடர்பு கொள்வார். 
சமீபத்தில் சென்னை பதிவர் சந்திப்பு மாநாடு நடந்தபோது அவர்தான் மதிய உணவு மற்றும் டீ, டிஃபன் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

கடைசியாக கடந்த வியாழன் மாலைதான் போன் செய்திருந்தார். எனது குழந்தையின் பிறந்த நாள் இந்த மாதம் வருவதை நினைவூட்டி அவரே கேட்டரிங் செய்து தருவதாகவும் மெனு அவர் சாய்ஸ் என்று கூட என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

இவரது இறப்பு அதிர்ர்சி அளிப்பதாக உள்ளது. 57 வயது!!!

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்.

மூத்த பையனுக்கும், மகளுக்கும் சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது. இளையமகனுக்குதான் இனி பொண்ணு பாக்கனும் ஜெய் என்று சொல்லிக் கொண்டிருந்தார். 
ஒரு தடவைப் பார்த்து பேசினாலே ஒட்டிக்கொள்ளும் சுபாவம் அவருடையது.... இவரின் நட்பு மூன்று வருட நட்பு. நெருங்கி பழகிய நட்பு.

எனக்கு இவரின் இழப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் கூட பழகிய அனைத்து நண்பர்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கிரது, அது இவரின் இறப்பு செய்தி கேட்டு, மாலையிலிருந்து எனக்கு போன் செய்து துக்கம் விசாரித்த நண்பர்களின் எண்ணிக்கையை பார்த்தாலே தெரிகிறது.

மணி அண்ணனின் இழப்பால் வாடும் அவர் குடும்பத்திற்கு எனது ஆழந்த இறங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


இறுதி சடங்கு நடைபெறும் இடம் - 


11 கே.ஆர். ராமசாமி தெரு,(விஸ்வா பேக்கரி எதிர் தெரு)
கே.கே.சாலை,எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் அருகில்,
எம்.ஜி.ஆர் நகர்,சென்னை - 78


(அசோக் பில்லரில் இருந்து 1 கி.மீ. தொலவு இருக்கும்.)

இறுதி சடங்கு நடைபெறும் நேரம் - 

நாளை(07-10-2012) ஞாயிரு காலை 9 மணிக்குத் துவங்கும் குடும்பத்தாரால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது









LinkWithin

Related Posts with Thumbnails